கன்னங்குறிச்சியில் நாளை - குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் :

கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நாளை (20-ம் தேதி) நடக்கிறது.

இதில், பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப்பி சிகிச்சையும், 8 வார கருகலைப்புடன் கூடிய (எம்விஏ) குடும்பநல அறுவை சிகிச்சையும், ஆண்களுக்கு தழும்பில்லா வாசக்டமி அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், 22-ம் தேதி காடையாம்பட்டியிலும், 24-ம் தேதி மேச்சேரியிலும், 26-ம் தேதி மல்லியகரையிலும், 27-ம் தேதி பேளூரிலும் அந்தந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.600-ம் ஆண்களுக்கு ரூ.1,100-ம் ஊக்கத் தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 2 பெண் குழந்தைகள் உள்ள பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என கன்னங்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் சவுமியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்