நெல்லையில் தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது : மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் கனமழையால் தேங்கிய தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரி வித்தார்.

திருநெல்வேலியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் இரவில் 86 மிமீ மழை பெய்துள்ளது. மழையால் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மாநகராட்சி மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெருமாள்புரம் இலங்கை தமிழர் முகாமில் தேங்கிய மழை நீரும் உடனடியாக வெளியேற்றப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும் மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. எனவே, மழை குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

மாவட்டத்திலுள்ள 6 அணை களில் பாபநாசம் அணையில் 96 சதவீதம், மணிமுத்தாறு அணை யில் 55 சதவீதம் தண்ணீர் உள்ளது. நம்பியாறு அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. எவ்வித பாதிப்புகளும் இல்லை. ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் குளிக்கவும், கரையோர பகுதிகளில் நின்று வேடிக்கை பார்க்கவும், செல்பி எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் சேதமடை ந்த சாலைகள் அனைத்தும் மழை க்குப்பின் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையால் சீரமை க்கப்படும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்