நெல்லை மணிமண்டப த்தில் - வ.உ.சி. சிலைக்கு மரியாதை :

திருநெல்வேலியில் வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு, மாநகராட்சி பொருட்காட்சி திடலிலில் உள்ள மணிமண்டப த்தில், அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், மாவட்ட வருவாய் அலு வலர் ஆ.பெருமாள், மாநகராட்சி ஆணையர் பா.விஷ்ணு சந்திரன், கோட்டாட்சியர் சந்திரசேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, வட்டாட்சியர் சண்முக சுப்பிரமணி யன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

வ.உ.சி.யின் புகழைப் போற்றும் வகையில் 14 சிறப்பு அறிவிப்புகளை சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதன்படி, `திருநெல்வேலியில் வ.உ.சி. மணிமண்டபத்தை புனரமைத்து, அவரது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி ஒளி காட்சி அரங்கம் அமைக்கப்படும். வ.உ.சி. கல்வி பயின்ற ம.தி.தா. பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலையரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்