திருக்கார்த்திகை தீபவிழா :

By செய்திப்பிரிவு

திருக்கார்த்திகை தீப விழா வழக்கமாக பவுர்ணமியுடன் கூடிய கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டு கார்த்திகை நட்சத் திரம் இன்று வந்தாலும், பவுர்ணமி நேற்றுதான் இரவு தங்கியது.

இதனால், வைகானச முறைப்படி பல்வேறு பெருமாள் கோயில்களில் திருக்கார்த்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில், திருக்குறு ங்குடி அழகிய நம்பிராயர் கோயில், பாளையங் கோட்டை ராஜகோபால சுவாமி கோயில், திருநெல்வேலி டவுனில் லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயில், கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளிட்ட தலங்களில் நேற்று இவ்விழா நடைபெற்றது. காலையில் பெருமாள், தாயாரு க்கு திருமஞ்சனமானது. மாலையில் சந்நிதிகளிலும், பிரகாரங்களிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து கோயில் வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உட்பட சிவன் கோயில்களில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்