ராணிப்பேட்டையில் எல்லைக் காவலர் கே.எல்.குருநாதனுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோ லையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி கவுரவித்தார்.
இந்தியாவில் கடந்த 1956-ம்ஆண்டு நவம்பர் மாதம் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன்படி, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகம், கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. நவம்பர் 1-ம் தேதியை எல்லைப் போராட்ட நாளாக நினைவு கூறும் வகையில், எல்லைப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளை தமிழக அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், எல்லைப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 110 எல்லைக்காவலர்கள் ஒவ்வொரு வருக்கும் ரூ.1 லட்சம் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை யில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தில் வசித்து வரும் எல்லைக்காவலர் கே.எல்.குரு நாதனுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று வழங்கி கவுரவித்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago