வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை, நாளை மறுதினம் சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் உள்ள 650 வாக்குச்சாவடி அமைவிடங்களில் இரண்டு நாட்களுக்கு புதிய வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் 1-1-2022 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 650 வாக்குச்சாவடி மையங்கள், வேலூர் மற்றும் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், வட்டாட் சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலைசரிபார்ப்பதுடன் திருத்தங்கள், முகவரி மாற்றம் உள்ளிட்டவை இருந்தால் சரி செய்துகொள்ள லாம். மேலும், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேரவும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய வாக்காளர் பெயர் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மேற் கொள்ள வசதியாக கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நாளை (நவ.20) மற்றும் நாளை மறுதினம் (நவ.21) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட உத்தரவுப்படி நவ.20 மற்றும் 21-ம் தேதியும், வரும் 27 மற்றும் 28-ம் தேதியும் 650 வாக்குச்சாவடி அமைவிடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், பெயர் சேர்ப்புக்கான விண்ணப்பங்களை வாக்குச்சாவடி மைய அலுவலரிடம் அளிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலரும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான வட்டாட்சியர் அலுவலகங்களில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்