திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் 2-வது நாளாக நேற்றும் கன மழை பெய்தது. நேற்று முன் தினம் பிற்பகலில் இருந்து இடைவிடாமல் மழை பெய்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் காலி இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. செய்யாறு உட்பட பல பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. ஏரிகள் மற்றும் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.
மழையளவு விவரம்
திருவண்ணாமலை மாவட் டத்தில் சராசரியாக நேற்று காலை நிலவரப்படி 20.44 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆரணியில் 20 மி.மீ., செய்யாறில் 18, செங்கத்தில் 9.2 மி.மீ., ஜமுனாமரத்தூரில் 22 மி.மீ., வந்தவாசியில் 18, போளூரில் 31.6, திருவண்ணாமலையில் 40.2, தண்டராம்பட்டில் 11.6, கலசப்பாக்கத்தில் 25.5, சேத்துப் பட்டில் 14, கீழ்பென்னாத்தூரில் 21.2, வெம்பாக்கத்தில் 12, மழை பெய்துள்ளது. இரவு 8 மணியை கடந்தும் மழை பெய்தது. ஒரே நாளில் நேற்று 10 மணி நேரத்தில் 50 மி.மீ., மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு வரும் 4,400 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணையாற்றில் வெளி யேற்றப்படுகிறது.
59.04 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையின் நீர்மட்டம்54.12 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் செய்யாற்றுக்கு வெளியேற்றப்படுகிறது.
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.73 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையில் நீர்மட்டம் 53.07 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 6,800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அணையின் பாது காப்பு கருதி, அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேலும் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago