மழை பாதிப்பு புகார்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் : வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க கண்காணிப்பு அலுவ லர்களை நியமித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையால் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இன்று (நவ.19) மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர் மழை காரணமாக தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம் களுக்கு செல்லும்படியும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்தடை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப மெழுகுவர்த்தி, விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை தொடர்பான புகார்களை ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 அல்லது 0416-2258016 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மழை பாதிப்பு தொடர்பாக வேலூர் மாநகராட்சி ஆணையரை 73973-89320, குடியாத்தம் நகராட்சி ஆணையாளரை 73973-92686, பேரணாம்பட்டு நகராட்சி ஆணை யாளரை 73973-97672 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மழை பாதிப்பு தொடர்பாக ஒவ்வொரு வட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, வேலூர் வட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் (94450-00417), அணைக்கட்டு வட்டத்துக்கு கலால் உதவி ஆணையர் (94448-38637, 87541-38637), காட்பாடி வட்டத்துக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் (88702-80192), கே.வி.குப்பம் வட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் (99523-14993), குடியாத்தம் வட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் (94877-56855, 90253-67102), பேரணாம்பட்டு வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (99447-25575) ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் (78240-58059) கண்காணிப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள் ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்