கொடிசியா கரோனா சிகிச்சை மையத்திலிருந்து 800 படுக்கைகள் அகற்றம் :

கொடிசியா கரோனா சிகிச்சை மையத்திலிருந்து நேற்று 800 படுக்கைகள் அகற்றப்பட்டன.

கரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தாக்கத்தின்போது கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் கரோனா தற்காலிகசிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.

கோவையில் தற்போது கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. இதனால் மையத்தின் இரு அரங்குகளில் அமைக்கப்பட்டிருந்த படுக்கை மற்றும் மருத்துவ வசதிகள் நேற்று அகற்றப்பட்டன.

இதுகுறித்து, கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு கூறும்போது, “மொத்தமுள்ள 5 அரங்குகளில் மூன்று அரங்குகள் கரோனா சிகிச்சைக்கான மையங்களாக மாற்ற ஒப்படைக்கப்பட்டது. பாதிப்புகுறைந்துள்ளதால் ஓர் அரங்கில் மட்டும் 400 படுக்கைகள் மற்றும்மருத்துவ வசதிகள் தொடர்கின் றன. இரு அரங்குகளில் இருந்து800 படுக்கைகள் வரை அகற்றப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் 50 பேர் மட்டுமே கொடிசியா வளாகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

கோவை வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற் கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE