பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் - பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் : கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளிகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறை கள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க புகார் பெட்டிவைக்க வேண்டும். புகார் பெட்டிக்குஇரு சாவிகள் இருக்க வேண்டும். ஒரு சாவி பள்ளியின் மூத்த பெண் ஆசிரியரிடமும், மற்றொரு சாவி மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது மாவட்ட இலவச சட்ட ஆணையத் தலைவரிடமும் இருக்க வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் அறியும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், அருகிலுள்ள காவல்நிலைய ஆய்வாளரின் செல்போன் எண், அலுவலக முகவரியை தகவல்பலகையில் ஒட்ட வேண்டும். மேலும், அதில் குழந்தைகள் உதவிமைய எண் 1098, பள்ளிக் கல்வித்துறையின் உதவி சேவை தொலை பேசி எண் 14417, பெண்கள் உதவிதொடர்பு எண் 181 ஆகிய எண்களும் இடம் பெற வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், சமூக ஆர்வலர், உள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரி, மாணவிகளின் பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளிகள் செயல்படும் இடத்துக்கு அருகிலுள்ள மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், குழந்தைகள் நலக்காவல் ஆய்வாளராக செயல்படுகிறார். அவரது தொலைபேசி எண்ணையும் தகவல்பலகையில் ஒட்டியிருக்க வேண்டும். குழந்தை உதவி மையத்திலி ருந்து பெறப்படும் தங்கள் பள்ளி தொடர்பான புகார்களுக்கு துரித நடவடிக்கை மேற்கொண்டு அதன்விவரத்தை உடனடியாக தொலைபேசி மூலமும், குழந்தை உதவிமையம், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு கடிதம் மூலமும் தெரிவிக்கபள்ளியின் தலைமை ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளிகளில் பெண் குழந்தைகள், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது ‘குட் டச் பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு கூட்டங்களை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தி,மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். உளவியல் ஆலோசகர் மூலம் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர் - வகுப்பாசிரியர் கூட்டம் சீரான கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும்.

பாலியல் தொந்தரவுகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE