சேலத்தில் தகுதிச் சான்று இல்லாத - தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

சேலத்தில் தகுதிச் சான்று இன்றி இயங்கிய தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சொந்தமான 3 பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம், தகுதி ச்சான்று புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, கரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு, அனைத்து துறைகளும் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளது. இதனையடுத்து, வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துத்துறை தொடர்பான ஆவணங்கள் பெற கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் தகுதிச் சான்று பெறாமல் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கோகிலா தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை சேலம் அம்மாப்பேட்டையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரு தனியார் கல்லூரி பேருந்து மற்றும் ஒரு தனியார் பள்ளி பேருந்தில் ஆவணங்களை சரிபார்த்தபோது, பேருந்துக்கு முறையாக வரி செலுத்தாமலும், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 3 பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE