மின்கம்பிகளுக்கு அருகே மரக்கிளைகள் இருந்தால் உடனே அழைக்கவும் :

புதுவை அரசு மின்துறை செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மின்கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி, கயிறுகள், ஆடு, மாடுகளை கட்டக் கூடாது. தொடர் மழைக் காலத்தில் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுக வேண்டும். இடி, மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் தொடக் கூடாது.

இதுபற்றிய புகார்களுக்கு 18004251912 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இடி, மின்னலின்போது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்த வேண்டாம். மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின் இழுவை கம்பிகளை தொட வேண்டாம். வீட்டு சுவர்கள், மின்சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்து விட்டு மின்துறைக்கு தகவல் தர வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE