அயன் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தாழை வாய்க்காலில் தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி வட்டத்துக்கு உட்பட்ட அயன் குறிஞ்சிப்பாடியில் சுமார் 820 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் தாழை வாய்க்காலில் உள்ள சிறிய அளவிலான குழாய் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். கடந்த தினங்களுக்கு முன் பெய்த தொடர் கன மழையால் இருந்து குழாய் பாலம் மழை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
தற்போதும் தாழை வாய்க் காலில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மழை தண்ணீரில் விளைநிலங்களும் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சேதசமான பயிரை பார்ப்பதற்கு கூட செல்ல முடியாத நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர். தற்காலிகமாக தாழை வாய்க்காலில் பாலம் அமைந்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் கூறுகையில், "இது 50 வருடகால பிரச்சினை. தாழை வாய்க்காலில் பாலம் கட்டாமல் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, பொதுப்பணிதுறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு யாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.
மாவட்ட நிர்வாகம் தற்காலிக மாக தாழை வாய்க்காலில் மூங்கில் பாலம் அமைக்க வேண்டும். பிறகு கான்கிரீட் பாலம் கட்ட உரிய நடவடிக்கைய எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago