கள்ளக்குறிச்சியில் தக்காளி விலை ரூ. 100- ஐ எட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள உழவர் சந்தையில் நேற்று தக்காளியின் விலை கிலோ ரூ.98க்கு விற்பனையானது. மற்ற காயகறிகளின் விலை கிலோ அளவில் பின்வருமாறு: உருளைக்கிழங்கு ரூ. 50, சின்ன வெங்காயம் ரூ. 30-35, பெல்லாரி வெங்காயம் ரூ. 50-55, கத்தரிக்காய் ரூ.80, முள்ளங்கி, பீன்ஸ் ரூ. 70, புடலங்காய் ரூ. 60 என விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
விழுப்புரம் உழவர் சந்தையில், தங்காளி ரூ. 80, பல்லாரி வெங்காயம் ரு. 36, முள்ளங்கி ரூ. 40 என விற்பனையாகியுள்ளது.தக்காளியை பொறுத்தவரை ரூ.100க்கு விற்பனையாகிறது. நிலையற்ற விலை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து விழுப்புரம் காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது,"ஓசூர், மேட்டூர், கிருஷ்ணகிரியிலிருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. மழையால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
வெயில் அதிகமாக இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago