நுரையீரல் நோயாளிகள் இயல் பான வாழ்வைப் பெறுவது எப்படி என்பது குறித்து மதுரை அரசு மருத்துவமனை கருத்தரங்கில் டீன் ரெத்தினவேலு விளக்கம் அளித்தார்.
உலக நாள்பட்ட நுரையீரல் அடைப்பு தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனையில் நடந்த கருத்த ரங்குக்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
நெஞ்சுச் சளி, அதிகரித்துக் கொண்டே வரும் மூச்சுதிணறல், தொடர்ச்சியான இருமல் ஆகி யவை நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் அறிகுறி களாகும். புகைப் பிடிக்காமல் இருப்பது, வேலை செய்யும் இடத்தில் அதிகப்படியான மாசுக் களிலிருந்து தற்காத்து கொள்வது போன்றவற்றின் மூலம் நாள்பட்ட நுரையீரல் நோய் வருவதைத் தவிர்க்கலாம்.
இந்த நோயால் பாதிக்கப் பட்டோர் மருத்துவர்களின் அறிவுரைப்படி உடற்பயிற்சி, சத்தான உணவுகளை உண்பது, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவறாமல் எடுப்பது, அவசர காலத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடுவது போன்றவற்றின் மூலம் இயல் பான வாழ்வைப் பெறலாம். முறையாகச் சிகிச்சை பெறுவதன் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை இன்ஃபுளூயன்சா தொற்று மூலம் திடீரென வரும் மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மருத்துவக் கண்கா ணிப்பாளர் (பொ) பேராசிரியர் தர்மராஜ், பொது மருத்துவத்துறை தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயைப் பற்றியும் வரும் முன் காப்பது குறித்த சிகிச்சை பற்றியும் எடுத்துக் கூறினர். பேராசிரியர் ஹரிபிரசாத் மற்றும் உதவிப் பேராசிரியர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago