தமிழ் உயராய்வு மையம், தமிழ்நாடு இலக்கியப் பெருமன்றம் மதுரை மாவட்டம் சார்பில், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் வானதி தொடங்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் விஜயராணி வரவேற்றார். கலை இலக்கியப் பெருமன்ற தலைமைக்குழு உறுப்பினர் திசு.நடராஜன் தொடக்க உரையாற்றினார்.
முதல் அமர்வில் தமிழ்த்துறை இணைப்பு பேராசிரியர் யாழ் சு. சந்திரா, காந்தி கிராமிய பல்கலைக்கழகப் பேராசிரியர் பா.ஆனந்தகுமார், மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் ரா. முரளி, மீனாட்சி கல்லூரி இணைப்பு பேராசிரியர் சத்யா ஆகியோர் பேசினர்.
2-வது அமர்வில், கலை இலக்கியப் பெருமன்ற துணைத் தலைவர் கவிஞர் பேனா மனோகரன், விமர்சகர் முருகேசபாண்டியன், பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் செல்வா, மீனாட்சி கல்லூரி இணைப் பேராசிரியை கவிதா ஆகியோரும் உரையாற்றினர்.
நிறைவு விழாவில், இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கவிஞர் மலர்மகள் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago