நெற்பயிரில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் நெற் பயிரில் காணப்படும் பச்சைக்கொம்பு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த தே.கல்லுப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் விமலா வழங்கியுள்ள ஆலோசனை:

நெற்பயிரைத் தாக்கும் பச்சைக்கொம்பு புழுவானது இலைகளை ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும். இதன் முட்டை வௌ்ளை நிறத்துடன் தனித்தனியாக இருக்கும். புழுவின் தலைப்பகுதியில் 2 சிவப்பு நிற கொம்புகள், நுனியில் 2 மஞ்சள் நிற கொடுக்கு இருக்கும். கூட்டுப்புழு இலையில் மறைந்திருக்கும். அந்துப்பூச்சி அடர் பழுப்பு நிறத்தில் பெரிய இறக்கைகளுடன் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.

இதைக் கட்டுப்படுத்த வயலில் நீரை வடியவிட வேண்டும். பின் மாலை வேளையில் குளோரிபைரிபாஸ் 20 இ.சி மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்