நீரிழிவு உள்ளிட்ட பல நோய்க ளுக்கும் அடிப்படை காரணமாக உள்ள மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி உதவும் என மதுரை அகர்வால் மருத்துவ மனையில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்ற உறுப்பினர் நீதிபதி பி.ராமசாமி பேசினார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்பு ணர்வு கூட்டம், மதுரை அகர்வால் கண் மருத்துவமனையில் நடந்தது. இதில் பங்கேற்ற புதுடெல்லி தேசிய மக்கள் நீதிமன்ற உறுப் பினர் நீதிபதி பி.ராமசாமி பேசியது: கரோனாவின் இரண்டாவது அலை நம்மிடையே அதிகம் பாதிக்காததற்கு காரணம் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக் கையே. அதற்கு பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நீரிழிவால் விழித்திரை பாதிக் காமல் காக்க வேண்டியது மிக முக்கியம். நீரிழிவு நோய்க்கும் கண்ணுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. மன அழுத்தம் பல பிரச்சினைகளுக்கும் பொதுவான காரணமாகிறது. யோகா, உடற்பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்’ என்றார்.
முன்னதாக கண் மருத்துவர் திவ்யா கூறுகையில், ‘3 நீரிழிவு நோயாளிகளில் ஒருவருக்கு விழித்திரை பாதிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் விழித்திரை சோத னையை ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். அதிகம் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் எடுத்துக்கொள்வது, முறையான உடற்பயிற்சி, 2 மணி நேர சூரிய குளியல் இந்நோய்க்கு சிறந்த நிவாரணம்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago