தேர்தல் பணிக்கு அரசு நிதி ஒதுக்கீடு - வருவாய்த் துறை அலுலர்கள் சங்க போராட்டம் வாபஸ் :

By செய்திப்பிரிவு

தேர்தல் மதிப்பூதியம் மற்றும் செலவு தொகை வழங்கப்பட்டதால் தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் முடிவை வருவாய்த் துறை அலுலர்கள் சங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

கடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பணியாற்றியதற்கான மதிப்பூதியம் மற்றும் செலவு தொகை வழப்படவில்லை. மேலும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட வருவாய்த் துறையினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நவ.13, 14 ஆகிய தேதிகளில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை வருவாய்த் துறையினர் புறக்கணித்தனர். நவ.20, 21-ல் நடக்கும் முகாமையும் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.இந்நிலையில் நேற்று வருவாய்த்துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றி சில அரசாணைகள் வெளியிடப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.பி.முருகையன் கூறியதாவது:

தேர்தல் மதிப்பூதியம் ரூ.164 கோடியை அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதைவிட கூடுதல் தொகையான தேர்தல் செலவினைத்தையும் அனுமதித்து உத்தரவிட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் இந்தப் பணம் விநியோகிக்கப்படும். இதன் மூலம் 6 மாதங்களாக பெரும் சங்கடத்துக்கு உட்பட்ட வருவாய்த் துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் கரோனா தடுப்புப் பணியின்போது பலியான வருவாய்த் துறையினர் பலருக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வருவாய்த்துறையினரின் கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதுடன், பணி புறக்கணிப்புப் போராட்டத்தையும் கைவிடுகிறோம்.

வெள்ளப் பாதிப்பு நிவாரணம் வழங்கல், மக்கள் குறை களைதல், பொங்கல் சிறப்பு தொகுப்பைக் கொண்டு சேர்த்தல், வாக்காளர் சிறப்பு முகாமை நடத்துதல் உள்ளிட்ட பணிகளை முழுவீச்சுடன் மேற்கொள்வோம்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்