வணிகவரித் துறையில் 100 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே திரும்பப் பெறக்கோரியும் வணிகவரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வணிகவரித் துறையில் 70 மாநில வரி அலுவலர்கள், 30 துணை மாநில வரி அலுவலர்கள், 30 ஓட்டுநர்கள் பொது மாறுதல் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மதுரை வணிகவரி அலுவலக வளாகத்தில் வணிகவரிச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரைக் கோட்ட தலைவர் அக்பர்பாட்ஷா தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் முருகேசன், மீனாட்சி, குணாளன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சோ. நடராஜன் போராட் டம் குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், ‘வணிக வரித்துறை அமைச்சரின் தலையீட்டின் பேரில் விதிக்கு முரணாக இந்த மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதை ரத்து செய்யாவிட்டால் வேலைநிறுத்தம் வரை செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago