செங்களாக்குடி கால்வாயில் உடைப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடியில் 420 ஏக்கரில் பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது. நீர்வள ஆதாரத் துறையின் கீரனூர் பிரிவு அலுவலகத்தின் கண்காணிப்பில் உள்ள இந்த கண்மாய்க்கு நீர்பழனி, ஒளவையார்பட்டி கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீரானது அணைக்கட்டு வழியாக வந்தடையும்.

பெரியகுளத்தின் தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கட்டில் இருந்து பெரியகுளம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு கால்வாய் தூர்ந்திருந்தது. இதை, செங்களாக்குடி கிராம மக்கள் குடி வரி மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து நிதி வசூலித்து இயந்திரம் மூலம் அண்மையில் தூர்வாரியதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நிரம்பியது.

இந்நிலையில், தூர்வாரப்பட்ட கால்வாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டதையடுத்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதை, உடனடியாக நீர்வள ஆதாரத் துறையினர் சீரமைத்துத் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE