திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் மழையால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் சேறும், சகதியுமான தெருக்களை சீரமைக்கக் கோரியும், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக நேற்று பாஜகவினர் காத்திருந்தனர்.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலர்களுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது.
இதையடுத்து, ராஜசேகரன் மற்றும் மகளிரணி நிர்வாகிகளை மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் அவதூறாக பேசியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
பின்னர், பாஜகவினர் அங்கு கோரிக்கை மனுவை அளிக்காமல், அங்கிருந்து ஊர்வலமாக மாநகராட்சி மைய அலுவலக வளாகத்துக்கு வந்து, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமானிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
பின்னர், மாநகராட்சி உதவிச் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்டோன்மென்ட் போலீஸில் பாஜகவினர் புகார் அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago