ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர் :

திருநெல்வேலியில் கார்த்திகை முதல் நாளான நேற்று ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். அதன்படி நேற்று தாமிரபரணி நதிக்கரையில் பாபநாசம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை உள்ளிட்ட இடங்களிலும், பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் துளசி மாலை அணியும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தென்காசி

குற்றாலம் காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள விநாயகர் சந்நிதியில் பக்தர் கள் மாலை அணிந்து நேற்று விரதம் தொடங் கினர். இதுபோல், மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலும் ஐயப்ப பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குற்றாலம் அருவியில் குளிக்க தடை நீடிப்பதால் அருகில் உள்ள ஆற்றில் நீராடி, மாலை அணிந்துகொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் குற்றாலம் அருவியில் நீராடிவிட்டுச் செல்வது வழக்கம். இந்த ஆண்டில் குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. அருவியில் குளிக்க அனுமதி அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்