திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடை பெற்றது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, வி.கே.புரம், அம்பாசமுத்திரம் நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்படவுள்ளன.
இதற்காக, திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2,700 வாக்குப்பதிவு இயந்திரங் களும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு 2,700 வாக்குப்பதிவு இயந்திரங்களும் மாநில தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை, திருநெல்வேலி மாநகராட்சி யிலும், சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்திலும் வைக்கப் பட்டிருக்கின்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி, அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன் னிலையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago