திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலப் பணிகள் முழுமை பெறாததால், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பாக பயன்பாட்டு வரும் என அரசு முதன்மை செயலாளர் தீரஜ் குமாரின் அறிவித்திருந்ததால், நம் பிக்கையுடன் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை நகரம், திண்டிவனம் சாலையில் ரூ.30 கோடி மதிப்பில் ரயில்வே மேம் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. திண்டிவனம் சாலை மற்றும் அண்ணா சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
ரயில் தண்டவாளத்தின் மேலே செல்லும் பகுதியில், கான்கிரீட் தளம் அமைப்பத்தில் ரயில்வே துறை மெத்தனமாக செயல்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. பொதுமக்கள் வலியுறுத்தியதால், ரயில்வே துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நிறைவு பெற்றுள்ளது. மேலும், பாலத்தின் அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணா மலை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது அவர், “திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவாக நிறைவு பெற்று, கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.
அவரது அறிவிப்பை கேட்டு, திருவண்ணாமலை நகர மக்களும், வெளியூர் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ரயில்வே மேம்பாலப் பணிகள் முழுமை பெறாததால், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு முன்பாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை தரப்பில் கேட்டபோது, “ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இரண்டு மார்க்கங்களிலும் சுமார் 150 மீட்டர் வரை சாலை மட்டுமே அமைக்க வேண்டும். மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. மேலும், பாலத்தின் தடுப்பு சுவர்களின் கருப்பு, வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்படுகிறது.
திண்டிவனம் சாலையில், மேம்பாலத்தின் அருகே சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் மேம் பாலத்தின் அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி முழு வீச்சல் நடைபெறுகிறது. இப் பணிகள் விரைவாக முடிந்துவிடும். அதன்பிறகு, மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். மழைக்காலமாக இருப்பதால், பணிகள் தடைப்பட்டு போனது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago