தொடர் கனமழை காரணமாக, நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீர் வரத்து அதிகமாக உள்ளது.
மழை மற்றும் வெள்ளக் காலங்களில் அதிகமாக வரும் நீர், கடலில் கலக்காமல் இந்த விஸ்வநாதபுரம் தடுப்பணையில் தடுத்து வைக்கப்படுகிறது.
14.654 மில்லியன் கனஅடி தண்ணீர் இங்கு தேக்கி வைக்கப்படுகிறது.
இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப் படுகிறது.
இந்த தடுப்பணையை நேற்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வை யிட்டு, தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பண்ருட்டி வட்டம் கரும்பூர் ஊராட்சியில் புதுப்பேட்டை - கரும்பூர் சாலையில் மலட்டாற்றிற்கு குறுக்கே உள்ள பாலத்தினை சீரமைப்பது குறித்து ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட வன அலுவலர் செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் (நெஞ்சாலைத் துறை) சுப்பரமணியன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago