சபரிமலையில் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்ன தானம் வழங்க அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்துக்கு மட்டும் கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது .
இதுபற்றி இந்த அமைப்பின் தமிழகத் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சபரி மலையில் நாள் ஒன்றுக்கு 25,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்தியோர் அல்லது 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயில் நடை திறக்கும் நாட்கள் எல்லாம் 3 வேளையும் அன்னதானம், சுக்கு நீர் வழங்குதல், இலவச மருத்துவ உதவி மற்றும் தமிழ் மாநில அமைப்பின் சார்பில் துப்புரவுப் பணியாளர்களை அனுப்புதல் போன்றவற்றை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அமைப்பின் நிர்வாகிகள் க.ஐயப்பன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மணி, ராஜதுரை மற்றும் முகாம் அலுவலர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago