பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி சில மாணவர்கள் கார்களையும், பேருந்துகளையும் மறித்து ரகளையில் ஈடுபட்டனர்.
பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி மதுரை அமெ ரிக்கன் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதே கோரிக்கையை வலியு றுத்தி தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர், சவுராஷ்டிரா ஆகிய கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று காலை கல்லூரி அருகே திரண்டனர். கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு மறுத்து திருப்பரங்குன்றம் சாலை யில் மறியல் செய்ய முயன்றனர். ஒரு சிலர் கார்களையும், பேருந்து களையும் மறித்தனர். பேருந்தின் முன் பக்கம் ஏறி ரகளை செய்தவர் களை போலீஸார் எச்சரித்தனர்.
தொடர்ந்து மாணவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி னர். கலைந்து செல்ல மறுத்து, ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனக் கூறினர். இதற்கு போலீஸார் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றனர். அவர்களை பழங்காநத்தத்தில் போலீஸார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேருந்துகளில் ஏறி நின்றும் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளைப் போலீ ஸார் பேருந்துகளில் ஏற்றிச் சென்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இறக்கி விட்டனர். ஆட்சியரிடம் மாணவர்களின் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
சிவகங்கை
இதே கோரிக்கையை வலி யுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன் அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப் பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago