மதுரை பெரியார் பஸ்நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அடுத்தவாரம் திறந்துவைக்க மாநகராட்சி நிர் வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.167.06 கோடியில் பெரியார் பஸ் நிலையம் கட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.
தற்போது பஸ்கள் வந்து செல்லும் வகையில் பஸ்நிலையம் தயாராக உள்ளது.
வணிக வளாக கட்டு மானப்பணி மட்டும் இன்னும் முடியவடையாமல் உள்ளது.
அதுவரை பஸ்நிலையத் திறப்பு விழாவை தள்ளிப் போடாமல் மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த வாரம் பஸ் நிலையத்தை திறக்க மாநகராட்சி முடிவு செய்தி ருக்கிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெரியார் பஸ்நிலையத் திறப்பு விழாவை அடுத்த வாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த விழா வுக்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்து வந்து திறக்க ஏற்பாடுகள் செய்து வரு கிறோம்.
தற்போது வரை முதல் வர் வருகை உறுதி செய்யப் படவில்லை. அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். கட்டு மானப்பணி நிறைவடையாத வணிக வளாகத்தைப் பின்னர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago