பாப்பாக்குடி போலீஸார் மீது புகார் :

சேரன்மகாதேவி வட்டம், பாப்பாக்குடி, செல்வி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், ‘பி.காம் படித்துள்ள எனது மகன் சுப்பிரமணியன் கடந்த 7-ம் தேதி சித்தாள் வேலைக்கு சென்றுவிட்டு, குளத்துக்கு குளிக்கச் சென்றான். அப்போது, மறுகால் பாலத்தில் வந்துகொண்டு இருந்த பாப்பாக்குடி போலீஸார் எனது மகனை விசாரித்து, கடுமையாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டுச் சென்று விட்டனர்.

இதுகுறித்து, காவல் நிலையத்துக்குச் சென்று கேட்டபோது, எனது இருசக்கர வாகனத்தை பறித்து வைத்துக் கொண்டு, அபராதம் விதித்தனர். எனது மகனை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸை அழைத்தபோது போலீஸார் தடுத்துவிட்டனர். எனது மகன் மீது தாக்குதல் நடத்தியதுடன், எனக்கு அபராதம் விதித்த காவல்துறை யினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE