கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் :

By செய்திப்பிரிவு

கும்பகோணம் நிதி நிறுவன மோசடி வழக்கு திருச்சி பொருளா தார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி பொரு ளாதாரக் குற்றப்பிரிவு-2 டிஎஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் நகர் காலனி காந்தி நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப் சவுகத் அலி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது, கும்பகோணம் நகர் காலனியில் செயல்பட்ட கே.சி.எல்(க்ரிஷ் கேபிட்டல்), மற்றும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்த எம்.ஆர்.கணேசன், எம்.ஆர்.சுவாமிநாதன் மற்றும் 8 பேர் தங்களிடம் முதலீடு செய்தால் கவர்ச்சிகர முதிர்வுத் தொகை கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய சவுகத் அலி ரூ.15 கோடி முதலீடு செய்துள்ளார். அதில் ரூ.1.79 கோடியைத் திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள ரூ.13.24 கோடியை திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் சவுகத் அலி புகார் அளித்துள்ளார்.

இதேபோல அவர்கள் மீது மேலும் 39 பேர் கொடுத்த புகார் களின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கு தற்போது திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாது காப்புச் சட்டத்தின்படி விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட் டுள்ளது. எனவே, இந்நிறுவனங் களால் ஏமாற்றப்பட்டு இதுவரை புகார் கொடுக்காதவர்கள், உரிய அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்திலுள்ள பொருளா தாரக் குற்றப் பிரிவு-2 டிஎஸ்பி அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் அளிக்கலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்