திருச்சி மாநகரில் - மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்த தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை : அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிரந்த தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாநகரில் மழைநீர் சூழ்ந்த வயலூர் சாலை வினோபா நகர், உறையூர் பாத்திமா நகர், தியாகராஜா நகர், ஏயுடி காலனி, லிங்கம் நகர், செல்வம் நகர், கருமண்டபம் அசோக் நகர், வசந்தம் நகர், எடமலைப் பட்டிப்புதூர் காந்தி நகர், டோபி காலனி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், மழை நீரை வெளியேற்றும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உய்யக்கொண்டான், கோரையாறு ஆகியவற்றில் தண்ணீர் வரத்தை பார்வையிட்டதுடன், உய்யக் கொண்டான் ஆற்றின் கரையைப் பலப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறியது: திருச்சி மாநகரில் மழை பாதிப்புகள் நேரிடும் இடங் களைக் கண்டறிந்து அவற்றுக்கு நிரந்தர தீர்வு காணும் வகை யில் நடவடிக்கைகள் எடுக்கப் படவுள்ளன. வடிகால் ஆக்கிரமிப்பு களை அகற்றினால் மக்கள் போராட் டம் நடத்துகின்றனர். அதேவேளை யில், மழையால் பாதிப்பு நேரிடும் போது ஆக்கிரமிப்புகளால் ஏற்படு வதாகக் கூறுகின்றனர். இருப் பினும், மக்கள் பாதிக்கப்படாத வகையில் மழை, வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மழை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வேறு பணிகளைத்தான் செய்துள்ளனர் என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், எம்எல்ஏக்கள் அ.சவுந்தர பாண்டியன், எம்.பழனியாண்டி, செ.ஸ்டாலின் குமார் மற்றும் மாநக ராட்சி, நீர்வள ஆதாரத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உட னிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்