தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மகா தீபம் ஏற்றப்படும் நாளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம், அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மூலமாக வழங்கப்பட இருந்த அடையாள அட்டை அச்சிடும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். சிவாச்சாரியார்கள், தூய்மைப் பணியில் ஈடுபடுபவர்கள், மின் பராமரிப்பு ஊழியர்கள், மலர் அலங்காரம் செய்பவர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் என சுமார் 1,500 பேருக்கு அடையாள அட்டை அச்சிடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், அடையாள அட்டை அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்த பாலாஜி என்பவர், அடையாள அட்டை ஒப்பந்ததாரர் என அவரது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அச்சிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டு சலசலப்பை ஏற் படுத்தி உள்ளார்.
இதையடுத்து, தனியார் நிறுவனம் மூலம் அடையாள அட்டை அச்சடிக்கப்படும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் மூலமாக புகைப்படத்துடன் கூடிய அடை யாள அட்டை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும் போது, “அடையாள அட்டை அச்சிட்டு வழங்கும் பணியில், ஆண்டுதோறும் முறைகேடு நடைபெறுகிறது. கோயில் பணிக்கு தொடர்பு இல்லாதவர்கள், அடையாள அட்டையை பெற்று சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது பக்தர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago