கெங்கவல்லியில் 29 மிமீ மழை :

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 29 மிமீ மழை பதிவானது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வழிகிறது. மேலும் ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி பகுதிகளில் பெய்து வரும் மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது. இதனால், இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

மழையால், சேலம் திருமணிமுத்தாறு கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம்: கெங்கவல்லி 29, தம்மம்பட்டி 20, வீரகனூர் 17, ஓமலூர் 8, ஏற்காடு 7.4, பெத்தநாயக்கன்பாளையம் 6, ஆணை மடுவு 5, ஆத்தூர் 4, எடப்பாடி 3, கரியகோவில் 2, மேட்டூர் 1.8, சேலம் 1 மிமீ மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்