மதுரை வைகை ஆற்றில் பொதுமக்கள் விழுந்து விடாமல் தடுக்க 6 கி.மீ. தொலைவுக்கு தடுப்புச் சுவர் கட்டும் பணி நடக் கிறது. இப்பகுதியில் மழை நீர் ஆற்றில் கலப்பதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும்.
மதுரை வைகை ஆற்றில் மழை நீர் ஓடும்போது இளைஞர்களும், சிறுவர்களும் நீச்சல் அடித்து மகிழ்கின்றனர்.
இதில் வைகை ஆறு வடகரை கீழ் பாலம் அருகே சில சமயம் உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதைத் தடுக்க அப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட மாநகராட்சி நட வடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆறு மேம் பாட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.81 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகையில் ஆற்றின் இரு கரையில் சுற்றுச்சுவர் கட்டப் படுகிறது. சில இடங்களில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நிறை வடைந்துவிட்டது.
இப்பகுதியில் பெய்யும் மழை நீர் நேரடியாக ஆற்றில் கலப் பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago