சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே நிதி ஒதுக்கியும் கால்வாயை தூர் வாராததால், கால்வாய் ஆங்காங்கே உடைந்து 30 ஏக்கர் விளைநிலங்களுக்குள் வைகை ஆற்றுநீர் புகுந்தது.
மானாமதுரை அருகே கட்டிக் குளம் கண்மாய் மூலம் 300 ஏக்க ருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இக்கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இதற்காக பெரும்பச் சேரி வழியாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கண்மாயும், கால்வாயும் பல ஆண்டுகளாகத் தூர்வாரவில்லை.
ஓராண்டுக்கு முன்பு அரசு நிதி ஒதுக்கியும் தூர்வாரவில்லை. இந் நிலையில் தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் கட்டிக்குளம் கண்மாய்க்கு தண் ணீர் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், கால்வாயைத் தூர் வாராததால் பெரும்பச்சேரி அருகே ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இயற்கை விவ சாயி சந்திரமோகனின் 30 ஏக் கர் விளைநிலங்களுக்குள் ஆற்றுநீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்ட பாரம்பரிய கல்லிமுடையான், சீரகச் சம்பா நெல் ரகங்கள், வாழை, கரும்பு நீரில் மூழ்கியுள்ளன.
இதுகுறித்து சந்திரமோகன் கூறியதாவது: இப்பகுதியில் 300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. நான் 30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறேன்.
கண்மாய்க்குச் செல் லும் கால்வாயை தூர்வாராததால் பயிர்கள் முழுவதும் மூழ்கி விட்டன. கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் எனக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் தவறால் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்று ஏற்படாமல் இருக்க கால்வாயை தூர்வார வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago