பரமக்குடி அருகே கிளியூர் பி.கொடிக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் நகை கடன் பெற்றனர். இதில் 81 பேர் கவரிங் நகைகளை வைத்து ரூ.1.47 கோடி மோசடி செய்தது அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் ராஜேந்திரபிரசாத் உத்தரவின்பேரில், துணைப் பதிவாளர் உதயகுமார் தலைமையில் பி.கொடிக்குளம் கூட் டுறவுச் சங்கத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆய்வுக்குப் பின் கூட்டுறவு சங்கச் செயலர் இளமதியான், துணைச்செயலர் முருகேசன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், சங்கத்தின் நகை மதிப்பீட்டாளர் அறிவழகன் மற்றும் பணியாளர்கள், தலைவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago