ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா நேற்று தொடங்கியது.இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத் திலிருந்து நேற்று காலை 10 மணிக்குப் புறப்பட்டு சந்தனு மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
தொடர்ந்து 2-வது புறப்பாடாக மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்ட நம்பெருமாள் 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு இரவு 365 வஸ்திரங்கள், 365 தாம்பூலங்கள் அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (நவ.16) அதிகாலை 2 மணி வரை கைசிக புராணத்தை பக்தி சிரத்தையுடன் பெருமாள் முன்பு பட்டர் படித்தார். பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 2-ம் பிரகார மேலப்படி வழியாக கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago