பருத்தி வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு :

By செய்திப்பிரிவு

அரியலூர் வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, உதவி இயக்குநர் சாந்தி, வேளாண் அலுவலர் தமிழ்மணி, வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சக்திவேல், கிரீடு வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் அழகுகண்ணன், தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜா ஜோஸ்லின், திருமலைவாசன் ஆகியோர் அரியலூர் அருகே இடையத்தான்குடி, கருப்பிலாகட்டளை பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பருத்திப் பயிர்களை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

அப்போது, வயல்களில் தேங்கும் மழைநீரால் பருத்திப் பயிர்களில் உருவாகும் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 1 லிட்டருக்கு 2 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸ் அல்லது 2 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைட் கலந்து, செடிக்குச் செடி வேர்ப் பகுதிகளில் ஊற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை விவசாயிகளுக்கு அதிகாரிகள் வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்