வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கொடுமுடியாறு அணையில் 25 மி.மீ., பாபநாசத்தில் 21, மூலக்கரைப்பட்டியில் 8, களக்காட்டில் 7.20, சேர்வலாறில் 6, மணிமுத்தாறில் 4.80, நாங்குநேரியில் 4.60, நம்பியாறு அணையில் 4, அம்பாசமுத்திரத்தில் 3, சேரன்மகாதேவி, ராதாபுரத்தில் தலா 2 மி.மீ., மழை பெய்துள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 7,378 கனஅடி நீர் வந்தது. 7,771 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 143 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 137.80 அடியாக இருந்தது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.6 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,244 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
நீர்மட்டம் 89.30 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 24 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 21.84 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணையில் 102 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 30 மி.மீ., குண்டாறு அணையில் 17, செங்கோட்டையில் 14, சிவகிரியில் 9, ஆய்க்குடியில் 8, கருப்பாநதி அணையில் 8, தென்காசியில் 7.40, ராமநதி அணையில் 3 மி.மீ. மழை பதிவானது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் முழு கொள்ளளவில் உள்ளன. இதனால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 415 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 47 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 371 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 87 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 93 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago