முதல்வரிடம் தூத்துக்குடி ஆட்சியர் அறிக்கை :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைசேதங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதியில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர்கி.செந்தில்ராஜ், ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோர் வரவேற்றனர். அங்கு பள்ளி மாணவ, மாணவிகள் நின்றிருந்தனர். பி.சந்தோஷினி என்ற மாணவி அளித்தகவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் புத்தகத்தை முதல்வர் பெற்றுக்கொண்டார்.

ஆட்சியர் அறிக்கை: மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில், “ தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு தற்போது வரை 292.51 மி.மீ. மழை பெய்துள்ளது. மழைக்கு 128 வீடுகள் பகுதியாகவும், 19 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து, நிவாரணத்தொகையாக ரூ.6.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 15 கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.1.51 லட்சம்வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தஇரண்டு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள639 குளங்களில் 157 குளங்கள் முழுமையாகவும், 176 குளங்கள் 75 சதவீதத்துக்கும் மேல் நிரம்பிஉள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 97 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் புத்தகங்கள் கொடுத்து முதல்வரை வரவேற்றனர். மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்,பி. ஞானதிரவியம், அப்துல்வஹாப் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், எம்எல்ஏ ராஜா, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா வரவேற்பு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்