வேலூர் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக - வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு : ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு சரிபார்ப்பு பணிகளை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களின் முதல் நிலை சரி பார்ப்பு பணி முடிந்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக மாதிரி வாக்குப்பதிவு சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சிகளில் உள்ள 57 வார்டுகள், திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் என 4 பேரூராட்களில் உள்ள 63 வார்டுகளில் விரைவில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, 646 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பயன்பாட்டுக்காக 3,273 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,707 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் கைவசம் உள்ளன. இவற்றை, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்ட ஊராட்சியின் பழைய கட்டிட வளாகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதில், 1,839 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 1,154 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளின் முதல் நிலை சரி பார்ப்பு பணி பெங்களூருவில் இருந்து வந்திருந்த பெல் நிறுவன பொறியாளர்கள் குழுவினர் மூலம் நடைபெற்றது.

இந்நிலையில், வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களின் மாதிரி வாக்குப்பதிவு சரிபார்ப்பு பணி நேற்று நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப்பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்