பருவதமலை கிரிவலத்துக்கு தடை :

By செய்திப்பிரிவு

கார்த்திகை தீபத் திருவிழாவில் பருவதமலை ஏறவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பருவதமலையில் உள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. வட்டாட் சியர் ஜெகதீசன் தலைமை வகித்தார். எம்எல்ஏ சரவணன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், “கரோனா தொற்று பரவல் காரணமாக பருவதமலை உச்சியில் வழக்கம்போல் உபயதாரர் மற்றும் கோயில் நிர்வாகம் மூலம் தீபம் ஏற்று வது, பருவதமலை மீது ஏறவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிப்பது, தென்மகாதேவமங்கலம் மற்றும் கடலாடியில் மலையேற வரும் பக்தர்களை தடுத்து நிறுத்துவது, மலையடிவாரத்தில் தீப தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது” என முடிவு செய்யப் பட்டது.

இதில், ஒன்றியக் குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் எழில்மாறன், வித்யா, பத்மாவதி, கோயில் செயல் அலுவலர் ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்