சிதம்பரம் அருகே - குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் :

சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் பிஎஸ்என்எல் குடியிருப்பில் வசிப்பவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் வண்டிகேட் பகுதி யில் பிஎஸ்என்எல் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 18 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

இதில் குடியிருப்பவர்களில் 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியில் உள்ளனர். மற்ற அனைவரும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டகளாக இந்த குடியிருப்பில் குடிதண்ணீர் சரியாக கிடைக்காமல் குடியி ருப்பு வாசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். கழிவுநீர் வெளியே செல்ல முடியால் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு அருகே தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. இதனை கண்டித்து குடியிருப்பு வாசிகள் நேற்று கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்