மதுரையில் ரயில் நிலையத்தில் - குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா :

By செய்திப்பிரிவு

மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, ராமேசுவரம் ஆகிய ரயில் நிலையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் இயங்குகின்றன. இங்கு வீட்டுக்கு தெரியாமல் தப்பி வரும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் ஆகியோரை மீட்டு காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக கட்டணம் இல்லாத 1098 என்ற தொலைபேசி எண் செயல்படுகிறது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை ரயில் நிலையத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நேற்று தொடங்கியது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரப் பலகையிலும் கையெழுத்திட்டார். குழந்தைகளின் கையில் விழிப்புணர்வு பட்டையை அணிவித்தார்.

விழாவில் நிலைய இயக்குநர் மற்றும் கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், காப்பக ஒருங்கிணைப்பாளர் அனிதா, துணை நிலைய மேலாளர்கள் பிரபாகர், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்