அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மாநில அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் நேற்று நடைபெற்ற அந்தச் சங்கத்தின் 14-வது மாவட்ட மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா.பால்பாண்டி தலைமை வகித்தார்.

மாநாட்டில், கரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப் பட்ட 14 சதவீத அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை மீண்டும் உடனடி யாக வழங்க வேண்டும். தேர்த லின் போது அளித்த வாக்குறுதி யின்படி, சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர் உட்பட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி, அவர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். மாநில அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக வரைமுறை செய்து ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் தற்காலிக பணி நியமனம், அவுட் சோர்சிங் முறை, ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம், ஆட்குறைப்பு ஆகிய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆண்- பெண் பாகுபாடின்றி இருபாலரையும் பணியமர்த்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கா.சிவசங்கரன், எம்.சகா தேவன், மாவட்டச் செயலாளர் பொ.பழனிசாமி, மாவட்டப் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன், இணைச் செயலாளர் பி.ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.பன்னீர்செல்வம், மாநில துணைத் தலைவர் ஏ.பெரியசாமி, மாநிலப் பொருளா ளர் மு.பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

முன்னதாக, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மு.சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் பி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்