திருச்சியில் பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்து மத்திய, மாநில பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கி, எல்ஐசி, பிஎஸ் என்எல், விமானம், விமான நிலை யம், போக்குவரத்து, மின்சாரம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் அரசு நிலங்கள், அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கண்டித்தும் மற்றும் பொதுத்துறை நிறுவனகளை அரசுகள் பாதுகாக்க வலியுறுத்தியும் மத்திய- மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நேற்று திருச்சி சேவா சங்கம் எதிரேயுள்ள நேரு சிலை முன்பிருந்து ரங்கம் வரை இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தொழிற்சங்கத்தினர் நேற்று நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, இருசக்கர வாகன பேர ணியை தொடங்க முயன்றபோது, போலீஸார் பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து, தொழிற் சங்கத்தினர் நேரு சிலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா, ரமேஷ்குமார், மணிவண்ணன், சந்தானம், கிருஷ் ணமூர்த்தி, மகேந்திரன், ராஜேந் திரன், திருநாவுக்கரசு, வேலுச்சாமி, செல்வன், செல்வராஜ், பிரபு ஆகியோர் பேசினர்.

காங்கிரஸார் பங்கேற்பு

ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸார், பின்னர், தொழிற் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்