கடலூர்- திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கடலூர்- திருச்சி பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்னக ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் என்.ஜெயப்பிரகாஷ், மத்திய ரயில்வே அமைச்சர அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணாடம், அரியலூர், கல்லக்குடி, புள்ளம்பாடி, லால்குடி, ரங்கம், திருச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிப்பதாக இருந்த கடலூர்- திருச்சி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் (வண்டி எண்:76841/ 76842) கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த ரயில் சேவை பெண்ணா டம், மாத்தூர், செந்துறை, அரியலூர், சில்லக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான விவசாய கூலித் தொழிலாளர்கள் நாள்தோறும் விவசாய பணிக்கு வந்து செல்ல உதவியாக இருந்தது. எனவே, பொதுமக்கள், விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ் வாதாரம், நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடலூர்- திருச்சி இடையேயான பயணி கள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்