மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் (யுபிஎஸ்சி) மூலம், தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ), கடற்படை அகாடமி (என்ஏ) மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை (சிடிஎஸ்) ஆகிய வற்றுக்கான தேர்வு வேலூரில் நேற்று 5 மையங்களில் நடை பெற்றது.
வேலூர் மாவட்டம் சத்து வாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, எத்திராஜ் மெட்ரிக் பள்ளி, சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி, ஊரீசு கல்லூரி என 5 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நேற்று நடைபெற்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 942 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் முதல்தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் 2-ம் தாள் தேர்வும் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வுகள் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை முதல் தாள் தேர்வும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 2-ம் தாள் தேர்வும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையில் 3-ம் தாள் தேர்வும் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகளில், இந்த ஆண்டு முதல் திருமணமாகாத பெண்களும் இத்தேர்வுகளில் பங்கேற்றனர். அதன்படி, சத்து வாச்சாரி ஹோலிகிராஸ் தேர்வு மையத்தில் 54 பெண்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
942 பேரில் 449 பேர் மட்டுமே நேற்று நடைபெற்ற தேர்வுகளில் கலந்து கொண்டனர். 493 பேர் தேர்வு எழுத வரவில்லை.
வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago