ஈரோடு மாவட்டத்தில் நேற்றும், இன்றும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதன்படி நேற்று காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 436 மையங்களில் முகாம் நடைபெற்றது. குறிப்பாக இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகர் பகுதியில் 60 இடங்கள், 4 இடங்களில் சிறப்பு முகாம், நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விவரம்சேகரிக்கப்பட்டு அதனடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுபோல் இன்றும் (14-ம் தேதி) சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் 447 மையங்களில் இன்று முகாம் நடைபெறுகிறது. இதுவரை தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், முகாமில் 61,600 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago